தொலைபேசி பயன்படுத்துவதில் அண்ணன், தங்கைக்குள் சண்டை.. இறுதியில் நேர்ந்த சோகம்.!

0
122

தமிழ்நாடு – புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையம் அருகே பாரதிதாசன் பல்கலைக்கழகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்திரைகுமார். இவரது மனைவி ஜீவிதா. இந்த தம்பதிக்கு 18 வயதில் மணிகண்டன் என்ற மகனும், 11 வயதில் பவித்ரா என்ற மகளும் இருந்தனர்.

இவர்கள் இருவருக்கும் செல்போன் பயன்படுத்துவதில் அடிக்கடை சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

அந்த வகையில், சம்பவத்தன்றும் இருவருக்கும் மொபைல் போன் பயன்படுத்துவதில் சண்டை வந்துள்ளது. இந்த சண்டையில் தங்கை பவித்ராவின் செல்போனை அண்ணன் மணிகண்டன் உடைத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பவித்ரா வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்திருக்கிறார். இதையடுத்து, தங்கையை காப்பாற்றுவதற்காக அண்ணன் மணிகண்டனும் கிணற்றில் குதித்துள்ளார்.

ஆனால், இருவருக்குமே நீச்சல் தெரியாததால், இருவரும் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்த நிலையில், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here