நாட்டின் பல பகுதிகளில் நாளை அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும்.!

0
35

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினமும் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக, திறந்த வெளிகளில் பணிபுரிபவர்கள் போதியளவு நீரை அருந்த வேண்டும் எனவும், வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

அதேநேரம், சிறு குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here