ஓடும் ரயிலில் Selfie எடுக்க முயன்ற ரஷ்ய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!

0
114

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் இருந்த ரஷ்ய பெண் ஒருவர் செல்ஃபி எடுப்பதற்காக ரயில் கதவின் வெளிப்புறம் சென்ற வேளையில் தலையில் கல் மோதி உயிரிழந்துள்ளார்.

ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அமுனுவெல்பிட்டிய பகுதியில் இன்று புதன்கிழமை (19) காலை 9.10மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

53 வயதுடைய ரஷ்ய பெணணொருவரே உயிரிழந்துள்ளார்.

ரஷ்ய பெண் தனது குடும்பத்தினருடன் நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதியொன்றுக்குச் சொந்தமான சொகுசு பஸ்ஸில் பதுளைக்குச் சென்றுள்ள நிலையில் எல்ல பிரதேசத்தைப் பார்வையிடுவதற்காக ரயிலில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட போது, ரஷ்ய பெண் ஏற்கனமே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here