நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின் உயிருக்கு ஆபத்து – சபையில் எதிர்க்கட்சி..!

0
12

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் குறித்து எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதால் குழப்ப நிலையேற்பட்டது.

இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின் உயிருக்கு ஆபத்து என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாளாந்தம் கொலைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் இதற்கு தீர்வை காண்பதற்கு உடனடி தீர்வு அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சட்டமொழுங்கை பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு எதிர்கட்சி தயாராகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படுவதாகவும் வெளிநாட்டிலுள்ள பாதாள கோஷ்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here