கரைவலை இழுக்கும் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

0
110

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு சமாகமதல பகுதியில் நேற்று உழவு இயந்திரம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்ததில் அதன் சாரதி உயிழந்துடன், மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளிவாசல்பாடு சமாகமதல பகுதியில் நேற்று (17) கரை வலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற உழவு இயந்திரம் அங்கிருந்த படகு ஒன்றினை இழுத்தெடுப்பதற்கு முற்பட்டதாகவும், இதன்போது குறித்த உழவு இயந்திரம் திடீரென தலை கீழாக கவிழ்ந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன் போது உழவு இயந்திரத்திற்குள் சாரதியும், மற்றுமொரு நபரும் நசுங்கி காயமடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவ்விருவரையும் உடனடியாக கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

எனினும், உழவு இயந்திரத்தின் சாரதி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றையவர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிழந்தவரின் சடலம் கொத்தாந்தீவு கிராமிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பள்ளிவாசல்பாடு கிராமத்தைச் சேர்ந்த 40 வயதடைய 03 பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்தள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here