அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அரசயடியில் இன்று மாலை (20) கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டர் சைக்கிளில் பயணித்த ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் ஆபத்தான நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.