நாட்டில் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, முச்சக்கர வண்டிகளின் இறக்குமதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னணி முச்சக்கர வண்டி விற்பனை நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம், பஜாஜ் முச்சக்கர வண்டிகளுக்கான முன்கூட்டிய ஆர்டர்களை ஏற்றுக்கொள்வதற்கான விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
அவர்களின் புத்தம் புதிய மூன்று சக்கர வாகனத்தின் விலை ஜிஎஸ்டியைத் தவிர்த்து ரூ. 1,690,678 என பட்டியலிடப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி சேர்க்கப்படும்போது, ஒரு முச்சக்கர வண்டியின் விலை ரூ. 1,995,022 ஆகும்.
தற்போது. ஆட்டோ புதிய விலை 20 லட்சமாம் 😱 அதேபோல். 3லட்சம் முன் பணத்தை வைத்துக்கொண்டு லீசிங்ல ஆட்டோ எடுப்பதாக இருந்தால் 4,5 வருடம் கட்டி முடிக்கும்போது. மொத்தமாக. 38லட்சத்திற்க்கு மேல். முடியும்.
புதிய ஆட்டோ குறைந்த விலைக்கு இறக்குமதியாகும் வாங்கலாம். என பல கனவுகளுடன், காத்திருந்த பல பேர்களில் கனவு, கனவாகவே போயுள்ளது.