சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் WhatsApp உரையாடல் வௌியானது.!

0
16

பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் திட்டமிட்ட கொமாண்டோ சலிந்த என்ற நபரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டதாக பொலிஸார் தற்போது கண்டறிந்துள்ளனர்.

இதன்போது கொமாண்டோ சலிந்த, “நீ வேலையைச் செய்” என்றார். வெளியே எல்லாம் சரி. பயப்படாதே. சுடு. எல்லாம் சாதகமாகவுள்ளது. “பயப்படாமல் சுடு என குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர், “உள்ளே பிரச்சினை இல்லையே?”​ “நான் உள்ளே இருக்கிறேன்” என்றார்.

“எதுவும் இல்லை, நீ ரெடியாகு சுடுவதற்கு” முடித்தே விடு. எல்லாம் சரியா இருக்கு” என்றார் கெமாண்டோ சலிந்த .

துப்பாக்கிச் சூடு நடத்தியவர், “அப்படியானால் பொலிஸார்?” என்று கேட்டார்.

காலை 9.48 மணிக்கு, கெமாண்டோ சலிந்த , “எல்லாம் சரியாக உள்ளது” நீ வேலையை செய் என்று கூறியுள்ளார்.

பின்னர், காலை 9.54 மணிக்கு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கெமாண்டோ சலிந்தவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்திருந்தார்.

பின்னர் அவர், “அவன் இறந்துவிட்டானா?” என்று கேட்டார்.

“இறந்துவிட்டான்” என்று கொமாண்டோ சலிந்தவுக்கு துப்பாக்கிதாரி பதிலளித்தார்.

“அருமை” என்று பதிலளித்த பிறகு, கொமாண்டோ சலிந்த “நீ என் உயிர்” என்று பதிலளித்தார்.

“ஏன் இப்படி கூறுகிறீர்கள், நீங்கள் தான் எனக்கு உணவளித்து தந்தை போல் கவனீத்தீர்கள். நீங்களே என் உயிர்” என துப்பாக்கிதாரி குறிப்பிட்டார்.

சகோதரி இன்னும் அங்கேயே தான் இருக்கிறாள். “நான் இங்கே இருக்கிறேன்,” என்று துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தின் கூண்டில் பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here