அம்பாறை – மஹியங்கனை வீதியில் வெலிகும்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேனின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது வேனின் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.