விமான நிலையத்தில் சிக்கிய 27 வயது அழகி..!

0
21

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை கடத்த முயன்ற இலங்கைப் பயணி ஒருவரை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

27 வயதான குறித்த பெண் கடவத்தை சூரியபலுவ பகுதியை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஆவார்.

அவர் நேற்று (22) பிற்பகல் 03.30 மணிக்கு துபாயிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானம் 8D-824 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் எடுத்துச் சென்ற பொருட்களில் 10,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்ததுடன் அவரிடம் இருந்த 50 அட்டைப் பெட்டி சிகரெட்டுகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குறித்த பெண் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை (25) நீர்கொழும்பு நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here