கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – துப்பாக்கிதாரி பற்றி வெளியான மற்றுமொரு தகவல்.!

0
5

கணேமுல்ல சஞ்சீவவைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரை குற்றவாளிகள் பேஸ்புக் வழியாக தொடர்பு கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இன்றைய (24) பிக் ஃபோகஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், குற்றவாளிகள் அந்த நபரை முன்னாள் இராணுவ வீரர் என்று அடையாளம் கண்ட பிறகு, “உனக்கு வேலையில்லையா? நீ சும்மா தானே இருக்கிறாய், சிறிய வேலை ஒன்று செய்யலாமா?” என்று பேஸ்புக் வழியாக கேட்டு இந்த கொலையை செய்ய அவர் தூண்டப்பட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

“கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், இந்தச் செயலில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் ஆயுதப்படைகள் அல்லது பொலிஸை சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரிகிறது.”

அவர்களை கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் இன்று காலை அறிவித்தார்.

சட்டப்பூர்வமாக ராஜினாமா செய்யாமல் ஒருவர் இராணுவப் பணியிலிருந்து விலகுவது குற்றமாகும்.

“அவர்களைக் கைது செய்ய சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளன.”

“சமீபத்தில், கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியும், இராணுவத்தில் இருந்து விலகி வேலையில்லாமல் இருந்ததை அறிந்தே குற்றவாளிகள் அவரை தொடர்பு கொள்ள முயன்றனர்.”

குறிப்பாக பேஸ்புக் வழியாகத் தொடர்பு கொண்டே இந்த கொலைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உனக்கு வேலை இல்லையா? நீ சும்மா தானே இருக்கிறாய்? சிறிய வேலை ஒன்று செய்வோமா? என்று அடிக்கடி தொடர்பு கொண்டே இந்த கொலைக்காக துப்பாக்கிதாரி தூண்டப்பட்டுள்ளார்.

“இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என அனைவரையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம், அவர்களை கைதும் செய்வோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here