பரந்தனில் 400 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது.!

0
182

லொறியில் கொண்டுச் செல்லப்பட்ட 400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா இராணுவத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து லொறியொன்றில் ஒன்றில் சூட்சுமமாக கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து வீதி சோதனையில் ஈடுபட்டனர்.

உமையாள்புரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வீதி சோதனையில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதுடன், வாகனமும் அதனை செலுத்திய சாரதி உள்ளிட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 400 கிலோவிற்கு அதிக நிறையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 6 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here