சூரிய மண்டலத்தைச் சேர்ந்த 7 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் தென்படும் அரிய வான நிகழ்வு இத்தினங்களில் நிலவுவதாக, நவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று முதல் வரும் 28ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சூரியன் மறைந்த பின்னர் இலங்கைக்கும் இந்தக் காட்சி மிகத் தெளிவாகத் தெரியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பூமியைத் தவிர, சூரிய மண்டலத்தைச் சேர்ந்த அனைத்து கிரகங்களையும் ஒரே பொதுவான பாதையில் இதன்போது பார்க்க முடியும் என்று பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார்.