தொழில் தொடங்க பணம் கேட்டு மிரட்டிய மகனுக்கு தாய் செய்த கொடூரம்.. பகீர் சம்பவம்.!

0
28

தமிழகத்தில் திருவள்ளூா் மாவட்டத்தில் கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தொடுகாடு ஊராட்சி நமச்சிவாயபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் 27 வயது கிருஷ்ணமூா்த்தி. இவரது மனைவி 23 வயது பாரதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

கிருஷ்ணமூா்த்தியின் 43 வயது தாயாா் ஜெயந்தி. இவர் மகனுடன் வசித்து வந்தாா். இந்நிலையில், கிருஷ்ணமூா்த்தி வேலை கிடைக்காமல் மது குடித்து விட்டு ஊா் சுற்றி வந்தாராம்.

இந்நிலையில் தொழில் தொடங்கப் போவதாகக் கூறி திங்கட்கிழமை மதுபோதையில் தாயாரிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்து மிரட்டினாராம்.

இதனால், ஆத்திரமடைந்த ஜெயந்தி, வீட்டின் சமையல் அறையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து கிருஷ்ணமூா்த்தியின் மீது ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதைப்பாா்த்த பாரதி மற்றும் அக்கம் பக்கத்தினா் கிருஷ்ணமூா்த்தியை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணமூா்த்தி செவ்வாய்க்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து பாரதி மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் தாயாா் ஜெயந்தி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here