தமிழ்நாட்டின் நாகை -இலங்கை காங்கேசன்துறை ‘செரியா பாணி’ பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது
அதன்படி நாகை – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இன்று 26-ந்திகதி முதல் 28-ஆம் திகதி வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் மார்ச் 1 ஆம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்திகதி ‘செரியா பாணி’ என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
பின்னர் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து இம்மாதம் 22-திகதி ஆரம்பமாகிய நிலையில் தமிழ்நாட்டில் 28-திகதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
மேலும் நாகை – இலங்கை இடையே நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து தொடங்கி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.