பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் T-56 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கம்பஹாவின் மஹேனா பகுதியில் உள்ள ஒரு கல்லறையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியுடன் 22 தோட்டாக்கள் மற்றும் ஒரு மெகசின் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.
மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.