அனுராதபுரம் கெக்கிராவ கைலபொத்தான பிரதேசத்தில் வைத்து மௌலவி ஒருவரின் கன்னத்தில் அறைந்த பொலிஸ் அதிகாரி தொடர்பிலான காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மௌலவியை எதற்காக பொலிஸ் அதிகாரி தாக்கினார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.