மரணச்சடங்குக்காக யாழ் சென்ற குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு.!

0
47

மரணச்சடங்குக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின தந்தையான வடிவேலு சற்குணராசா (வயது-61) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், ஆறுகால்மடத்தில் உள்ள உறவினரின் மரணச்சடங்குக்கு அவரும் மனைவியும் வந்திருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மரணச்சடங்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து பிற்பகல் 1:30 மணியளவில் அருகில் உள்ள உறவினர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது அவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.

அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அங்கு உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here