மதுபோதையில் மணப்பெண்னுக்கு பதிலாக அவரது நண்பருக்கு மணமகன் மாலை அணிவித்துள்ளார்.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர குமார். இவருக்கும் ராதா தேவி என்ற பெண்ணுக்கும் பெற்றோர்களால் திருமண நிச்சய ஏற்பாடு செய்யப்பட்டது.
திருமணத்தன்று நண்பர்களுடன் மது அருந்திவிட்டு காலையில் தாமாதமாக வந்த மணமகன் ரவீந்திர குமார், மாலை மாற்றும் நிகழ்வின் போது, மணப்பெண்ணின் கழுத்தில் மாலையிடுவதற்கு பதிலாக மணப்பெண்னின் அருகில் இருந்த நண்பருக்கு மாலையிட்டுள்ளார்.
இதை பார்த்து அங்கு வந்திருந்த அனைவரும் சிரித்ததால், ஆத்திரமடைந்த மணப்பெண், மணமகனின் கன்னத்தில் அறைந்து விட்டு, குடிகார மாப்பிள்ளை வேண்டாம். அவரை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறி அங்கிருந்து வேகமாக சென்றார்.
இதனையடுத்து இரு குடும்பத்தினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், சேர்கள், உணவுகள் தூக்கி வீசப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தினர்.
டிரக் ஓட்டுநராக உள்ள ரவீந்திர குமார், தங்களிடம் விவசாயி என பொய் சொன்னதாகவும், மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டதாகவும் மணமகளின் சகோதரர் ஓம்கார் வர்மா புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ரவீந்திர குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரவீந்திர குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.