ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் மைட்டிசி என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வரும் ஒரு கணவன் தன்னுடைய மனைவிக்காக காதலர் தினத்தன்று ஒரு பழைய காரை ரிப்பேர் செய்து பரிசு கொடுத்தார்.
அதன்படி Porsche macan என்ற சொகுசு காரை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 27 லட்ச ரூபாய்க்கு வாங்கினார். இந்த கார் ஒரு பழைய விபத்தில் சேதம் அடைந்துள்ளது. தன்னுடைய மனைவிக்கு காதலர் தினத்தில் பரிசு கொடுக்க விரும்பிய அந்த கணவர் புது கார் வாங்கினால் நிறைய பணம் தேவைப்படும் என்பதால் அந்த பழைய காரை வாங்கியுள்ளார். முதலில் அந்த காரை முழுமையாக பழுது பார்த்து மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தன்று பரிசு கொடுக்க நினைத்தார்.
ஆனால் அப்போதும் முடியாததால் காதலர் தினத்தில் பரிசாக கொடுத்தார். ஆனால் அது பழைய கார் என்பதால் அந்தக் காரை வாங்க அவருடைய மனைவி மறுத்துவிட்டார். இதனால் வேதனை அடைந்த அந்த கணவர் கோபத்தில் குப்பைத் தொட்டியில் அந்த காரை வீசிவிட்டார்.
கிட்டத்தட்ட 20 நாட்களாக அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் அந்த கார் கிடக்கும் நிலையில் அந்த காரை மீண்டும் எடுக்க அவர் முயற்சி செய்யவில்லை. மேலும் இந்தக் காரை அந்தப் பகுதியில் இருப்பவர்கள் வினோதமாக பார்க்கும் நிலையில் வேறு பகுதியிலிருந்து வந்தும் அதனுடன் செல்பி எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். இதனால் தற்போது அந்த கார் இருக்கும் இடம் ஒரு சுற்றுலா தளம் போன்று மாறிவிட்டது.