சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். பெண்கள் வெளியே சென்றால் மட்டும் இல்லை, தங்களின் சொந்த வீடுகளிலேயே பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
அதுவும் தனது சொந்த தந்தையால் பலாத்காரம் செய்யப்படும் பெண்கள் அநேகர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தங்களின் சொந்த தந்தையால் நேர்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் 56 வயது நபர் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், இவருக்கு 16 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இவருக்கு தனது சொந்த மகள்கள் மீதே மோகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தனது சொந்த மகள்கலுக்கே பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதில் இவரது ஒரு மகள் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனால் வீட்டில் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவர் தனது மகளை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், தனது மகள்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அவர் தனது மனைவியை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
தகவலின் அடிப்படையில், மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீது பால்கர், கர்ஜத், கன்கவ்லி மறும் சியோன் ஆகிய காவல் நிலையங்களில் 6 வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ந்துப் போன போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.