வவுனியாவில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவருக்கு நீதிமன்று 10ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் வைத்து இளம்சட்டத்தரணி ஒருவரிடம் சோதனை நடாத்தப்பட்டது.
இதன்போது அவரது உடமையில் கஞ்சா இருந்ததாக தெரிவித்து குறித்த சட்டத்தரணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை அதற்கான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக சட்டத்தரணியை குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்றம் அவருக்கு 10ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தது.