இரு குழுக்கள் இடையே மோதல் – சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு.!

0
41

பத்தேகம, மத்தெவில பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (27) இரவு மரண வீடொன்றில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது இரு குழுக்களிடையே கடுமையான மோதல் சம்பவம் ஏற்பட்டது.

சம்பவத்தில் சகோதரர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here