திருகோணமலையில் பேருந்தும் ஒன்றும் லொறி ஒன்றும் மோதிக்கொண்ட விபத்தில் 33 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (01) திருகோணமலை – மூதூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த 33 பேரில் 18 பேர் பெண்கள் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மினுவங்கொடையிலிருந்து சேருவாவிலயில் உள்ள வில்கம் விஹாரைக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்தில் சிக்கியுள்ளது.
காயமடைந்துள்ளவர்கள் தற்போது மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.