இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது.!

0
47

இலஞ்சம் கோரியமை, அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் இலஞ்சம் வாங்கிய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்னேவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக, முறைப்பாட்டாளர் வாங்கிய அறுவடை இயந்திரம் அதை விற்பனை செய்த நபருக்குச் சொந்தமானது அல்ல என்றும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இந்த விடயத்தைத் தீர்த்து, இயந்திரத்திற்கு அவர் செலுத்திய பணத்தை மீட்டு, தனது பழைய இரும்பு விற்பனைத் தொழிலை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தொடர உதவுவதற்காக, 30,000 ரூபா இலஞ்சம் கேட்டதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் கேட்டல், அதற்கு உடந்தையாக இருத்தல் மற்றும் அந்தப் பணத்தைப் பெற உதவிய குற்றச்சாட்டின் பேரில், கல்னேவ பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் நேற்று (01) இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here