கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மாத்தளை பிரதேச குற்றவியல் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (01) மாலை மஹாவெல பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தோடம்கஸ்லந்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர் கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மஹவெல பொலிஸ் பிரிவின் மில்லவான, லுல்கட பகுதியில் 73 வயது முதியவரை வெட்டி கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலை தொடர்பாக மாத்தளை பிரிவு குற்றவியல் பணியகம் மற்றும் மஹாவெல பொலிஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மஹாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.