கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 இளம் பெண்கள் கைது.!

0
76

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு சென்ற இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் விமானப் பயணிகள் இன்று காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இருவரில் ஒருவர் பொலநறுவை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் எனவும் மற்றைய பெண் நாரம்மல பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த சிகரெட்டுகளை கொண்டு வருவதற்காகவே இருவரும் சுற்றுலா விசாக்களின் கீழ் டுபாய்க்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here