மட்டக்களப்பில் நடந்த கத்திக்குத்து சம்பவம்.. 4 பேர் கைது..!

0
117

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான நால்வரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது 22,24,28,50 வயதுடைய 4 சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் 31 வயதுடைய வர்த்தகர் உயிரிழந்த சம்பவத்தில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணை முன்னெடுத்த நிலையில் நேற்று முன்தினம் நான்கு சந்தேக நபர்களையும் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.