அநுராதபுரம், ஹபரணை, புவக்பிட்டிய பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) மாலை யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.
விவசாயி நேற்றைய தினம் மாலை தனது வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் போது யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹபரணை பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவரின் பராமரிப்பில் உள்ள “பொடி ராஜு“ என்ற யானையே இவ்வாறு விவசாயியை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த யானை நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் அமரதுங்க என்ற நபருக்கு சொந்தமானது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஹபரணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.