புதுக்குடிருப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 4 பேர் கைது.!

0
81

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத் தலைமையிலான பொலிஸார் நேற்றுமுன்தினம் (03.03.2025) அதிரடியாக களமிறங்கி நால்வரை கைது செய்துள்ளதுடன் கசிப்பு உற்பத்தி நிலையங்களில் களமிறங்கி 22 வரலும், கோடாக்கு பயன்படுத்தும் சுருள், கோடா என்பனவற்றையும் கைப்பற்றியிருந்தனர்.

மன்னாகண்டல், 10 ஆம் வட்டாரம், தேவிபுரம், சுதந்திரபுரம், உடையார்கட்டு, வெள்ளப்பள்ளம் போன்ற பல்வேறு பகுதிகளில் களமிறங்கி தேடுதல் பணியின் மூலமே இவ்வாறு 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சந்தேக நபர்களை நேற்றையதினம் (04.03.2025) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்திய போது கசிப்பு உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், ஏனைய மூவரும் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 தொடக்கம் 38 வயதுக்குட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here