வழமையான சேவைக்கு திரும்பிய காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல்..!

0
48

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பலின் சேவையானது வழமைக்கு திரும்பியதாக அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.சத்தியசீலன் தெரிவித்தார்.

செவ்வாய் கிழமை தவிர்ந்த அனைத்து நாட்களும் இந்த கப்பல் சேவையானது இடம்பெற்று வருகின்றது.

எனவே பயணிகள் www.Sailsubham.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலமாகவோ அல்லது 0212224647, 0117 642117 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ ஆசன பதிவுகளை மேற்கொள்ள முடியும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here