களுத்துறை, அட்டுலுகம பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் பண்டாரகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். (Video-FB)