மட்டக்களப்பு – வாழைச்சேனை வீதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

0
63

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் மட்டக்களப்பு வாழைச்சேனை வீதியில் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை (6) இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணையடிச் சேர்ந்த 41 வயதுடைய கோறளைப்பற்று பிரதேச சபையில் காவலாளியாக கடமையாற்றும் ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் முன்னே சென்ற முற்சக்கரவண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளை வேகட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியில் மோதுண்டதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

இதன்போது அருகில் இருந்த வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போதிலும் தலைப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அதிகளவு இரத்தப்போக்கினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மெற்கொண்டுள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here