வாகன இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள நிபந்தனை.!

0
58

இறக்குமதியாளர் ஒருவரால் 6 மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 25% சதவீதத்தை பதிவு செய்யத் தவறினால், குறித்த இறக்குமதியாளரின் இறக்குமதி அனுமதி இரத்துச் செய்யப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாக்கவும், அதிகப்படியான வாகனங்களை இறக்குமதி செய்வதைத் தடுக்கவும், தேவையற்ற முறையில் வாகனங்களின் சேமிப்பைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தனிப்பட்ட ரீதியாக வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்றும், மேலே குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் அதற்குப் பொருந்தாது என்றும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்க நிதிக் குழுவின் சமீபத்திய கூட்டத்தில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

“2020 ஆம் ஆண்டில் வாகனங்களின் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்காலிக இடைநிறுத்தத்தை நிறுத்தி வைப்பதற்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதற்கான அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அதற்கமைவாகவே வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது. HS குறியீடு 304 இன் கீழ் உள்ள வாகனங்கள் இலங்கைக்குள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் 90 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் CIF-இல் 3% அபராதம் விதிக்கப்படும், அதிகபட்சம் 45% வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், இறக்குமதி செய்யப்பட்ட அளவில் 25% வீதமானவை 6 மாதங்களுக்குள் பதிவு செய்யப்படாவிட்டால், அவர்களின் இறக்குமதி நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படும். அந்த நிபந்தனைகளின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்படும் அனுமதி இடைநிறுத்தப்படும்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here