கண்டி பிரதேசத்தில், திருமணமான பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கண்டி தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, பிலிமத்தலாவை பிரதேசத்தில் வசிக்கும் பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இவர் பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.