உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் SK vlog என்ற வலையொளி பக்கத்தின் வலையொளியாளர் ஒருவர் இளம் பிள்ளைகளை வற்புறுத்தி காணொளி எடுக்க முயலும் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வலையொளியாளர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களின் காணொளிகளை தனது வலையொளி பக்கத்தில் பதிவேற்றி, புலம்பெயர் மக்களிடம் பணத்தினை பெற்று அதன் மூலம் உதவி செய்வதாக காண்பித்து வருகின்றார்.
அவ்வாறு காணொளிகளை பதிவு செய்யும்போது அந்த வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பத்தின் மனம் நோகும்படியாக பேசுவது, அவர்களை எள்ளி நகையாடுவது, இளம் பிள்ளைகளை வற்புறுத்தி காணொளிக்குள் அழைப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணியான எஸ்.செலஸ்ரின் மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் விபரங்களை திரட்டி அவர்களிடம் விசாரணைகளை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகமும் ஈடுபட்டு வருகிறது.C