பொலிஸ் கழிப்பறையில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் வகை போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றும் 39 வயதுடைய கான்ஸ்டபிள் ஆவார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, இந்த கான்ஸ்டபிள் ஐஸ் வகை போதைப்பொருட்களுடன் சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும் சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.