கொலையுடன் தொடர்புடைய ஒருவர் திருகோணமலை – மூதூரில் கைது..!

0
65

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபரை திருகோணமலை – மூதூர் பொலிஸார் கைது செய்யதுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மூதூர் பொலிஸ் பிரிவின் மணச்சேனை பகுதியில் நேற்று (08) அதிகாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர் வசம் இருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைகுண்டு ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருகோணமலை ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதானவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், மொரவெவ பொலிஸ் பிரிவில் நடந்த ஒரு கொலையில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் இவர் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர், மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here