பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்.. மலையகத்தில் சம்பவம்.!

0
54

நேற்று மாலை நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் அதிக அளவில் மாத்திரை விழுங்கி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று மாலை மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட மறே பிரிவில் இடம் பெற்று உள்ளது.

சிறுமியின் வாய் பகுதியில் நுரை வருவதை கண்ட பெற்றோர் உடன் முச்சக்கர வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க கொண்டு செல்லும் போது இடை நடுவில் மரணித்து உள்ளார் என மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாணவியின் உடலம் இன்று டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ள பட்ட போது அந்த மாணவியின் உடட் பாகங்கள் மேலதிக பரிசோதனை அனுப்பி வைக்க பட்டு உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி பி.தியாகராஜன் தெரிவித்தார்.

மாணவியின் உடலம் உடற் கூற்று பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோர் இடம் ஒப்படைக்கபட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here