திருகோணமலையில் 15 வயதுடைய மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் முல்லைத்தீவில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு சிலாவத்தையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் திருகோணமலையில் உள்ள மனைவியின் சித்தி வீட்டிற்கு போய்வருவது வழக்கமான நிலையில் சித்தியின் மகளான 15 வயதுடைய பாடசாலை மாணவியை அதிக நாட்களாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்நிலையில் மாணவிக்கு உடநிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக குறித்த மாணவி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தபட்டபோது குறித்த மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
அதனையடுத்து குறித்த மாணவியிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் நேற்றுமுன் (09.03.2025) மாலை முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணையின் பின்னர் நேற்று (10.03.2025) முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் 33 வயதுடைய தீர்த்தக்கரை சிலாவத்தையில் வசிக்கும் மீனவர் சங்க தலைவர் என்பதும் குறிப்பிடதக்கது.