அதிர்ச்சி சம்பவம்.. கத்தியை காட்டி மிரட்டி பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்..!

0
97

அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரின் இருப்பிடம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

முன்னதாக கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அனுராதபுரம் வைத்தியசாலையில், திங்கட்கிழமை (10) இரவு கடமையில் இருந்த பெண் வைத்தியரை கத்தியை காண்பித்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார் என்றார்.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனுராதபுரம் வைத்தியசாலையில் கடமையாற்றுவோர், வேலைநிறுத்த போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 32 வயது வைத்தியர் நேற்று (10) தனது கடமைகளை முடித்துவிட்டு, அரசாங்கத்தால் வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட அவரின் தங்குமிடத்திற்குச் சென்றுள்ளார்.

பின்னர் மாலை 6:30 மணி முதல் 7 மணி வரையான காலப்பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் அவரின் தங்குமிடத்திற்கு சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here