கிளிநொச்சியில் கிராம அலுவலகர் மீது ஒரு குடும்பமே தாக்குதல்; நடந்தது என்ன.? Video

0
58

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிருஸ்ணபுரம் கிராம அலுவலகர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த 8ம் திகதி மகளீர் தினத்தன்று இடம்பெற்றுள்ளது.

கிராம சேவையாளரிடம் நற்சான்றதழ் பெற்றுக் கொள்ள சென்ற நபர்களிடம், விடயங்களைக் கேட்டு அதனை எழுதிக்கொண்டு இருக்கும் போது சரியான தகவல் கொடுக்காமல் குறித்த கிராம சேவையாளர் மீது குடும்பமே வந்து தாக்கியுள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் வந்து வேடிக்கை பார்த்து நின்றதாகவும், முறையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய நியமனத்தில் கடமையில் ஈடுபட்ட கிராம சேவையாளர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிராமசேவையாளருக்கு கைநீட்டிய பெண்ணிற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பலரும் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. (video-fb)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here