கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லும் சனிபகவான்.. இந்த 4 ராசிக்காறங்க ஜாக்கிரதையா இருக்கனும்..!

0
35

நவகிரகத்தில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். ஒரு இராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆவார். அந்த வகையில் மார்ச் 29 ஆம் திகதி இரவு 9:44 மணிக்கு கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3 ஆம் பாதத்தில் இருந்து, மீன ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் 4 ஆம் பாதத்திற்கு பெயர்சியாக உள்ளார்.

இவர் மீன ராசியில் 2027 ஜூன் 3 ஆம் திகதி வரை சஞ்சரிக்க உள்ளார். இந்த காலத்தில் எந்தெந்த ராசிகளுக்கு சனி பகவானால் மிகவும் சாதகமற்ற சூழல் ஏற்படும். எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்.

பொதுவாக சனி பகவான் ஏழரை சனி காலத்தில் மிகவும் கடினமான பலன் தரக்கூடியவராக இருப்பார். சனி பகவான் தான் சஞ்சரிக்க கூடிய ராசிக்கும், அதற்கு முன் மற்றும் பின் உள்ள ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கும்.

அந்த வகையில் சனி பெயர்ச்சியாக உள்ள மீன ராசிக்கும், அதற்கு முன் உள்ள கும்பம், அதற்கு பின் உள்ள மேஷ ராசிக்கும் ஏழரை சனி நடக்கும்.

அதே போல அஷ்டம சனி (சிம்மம்), அர்த்தாஷ்டம சனி (தனுசு) நடக்கக்கூடிய ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இனி சனி பகவானின் மாறுதலால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை தெரிந்து கொள்வோம்.

மேஷம்;
மேஷ ராசிக்கு ஏழரை சனியின் முதல் பகுதியான விரய சனி தொடங்க உள்ளது. இந்த விரய சனி காலத்தில் மிக மிக கவனமாக இருப்பது நல்லது. உங்கள் வாழ்க்கையில் மன கலக்கமும், நிதி நிலை சார்ந்த சிக்கல்களையும் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் மன கவலையை அதிகரிக்க செய்யும். தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

இந்த காலத்தில் உங்களின் விரய செலவுகளை, சொத்து வாங்குதல், தங்கத்தில் முதலீடு செய்தல் போன்ற சுப செலவுகளாக மாற்றிக் கொள்வது நல்லது. இந்த காலத்தில் தான, தர்மங்களில் ஈடுபடவும். இது உங்கள் செலவை அதிகரித்தாலும், உங்களின் மன மகிழ்ச்சியையும், புண்ணியத்தையும் அதிகரிக்கும்.

சிம்மம்;
சிம்ம ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால், அஷ்டம சனி காலத்தில் புதிய வேலையை தொடங்குவதைத் தவிர்க்கவும். வேலை தேடுபவர்களுக்குத் தாமதம் ஏற்பட்டாலும் நல்ல செய்தி கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. அது தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.

இந்த காலத்தில் குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழலும், சண்டை, சச்சரவுகள் சந்திக்க வாய்ப்புள்ளது. மனதில் ஏதேனும் ஒரு குழப்பம் இருக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையை சரியான வகையில் ஒழுக்கத்துடன் செய்து முடிக்கவும். இல்லையெனில் வேலை பறிபோக வாய்ப்புள்ளது. பணியிடத்தில் வாக்குவாதங்களில், பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம்.

புதுமண தம்பதிகள், உங்கள் மண வாழ்க்கை குறித்த கனவுகள் அதிகரிக்கும். துணையுடன் இணக்கமான சூழல் இருந்தாலும், வாழ்க்கையில் இனிமையை அனுபவிக்க இயலாத சூழல் இருக்கும்.

கும்பம்;
கும்​ப ராசிக்கு ஏழரை சனியின் கடைசி பகுதியான பாத சனி நடக்க உள்ளது. உங்கள் ரசிக்கு 2 ஆம் வீடான தன, வாக்கு ஸ்தானத்தில் சனி சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த பாத சனி காலத்தில் கும்ப ராசியினர் வண்டி, வாகன பயன்பாட்டில் கவன தேவை. காலில் அடிபட வாய்ப்புள்ளது. நொண்டி நடக்க வேண்டிய நிலை இருக்கும். வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் உங்கள் பேச்சால் தேவையற்ற வில்லங்கங்கள் ஏற்படும்.

விரய சனி, ஜென்ம சனியைப் போல சனியின் மாயைகளிலிருந்து விடுபட்டாலும், பிரச்சினைகள் தொடரக்கூடியதாகவே இருக்கும். உங்கள் கல்வி, வேலை வாய்ப்பு, திருமண முயற்சி போன்ற விஷயங்களில் தாமதமும், காத்திருக்க வேண்டிய சூழலே இருக்கும்.

திருமண வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. துணையுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பண வரவு எதிர்பார்த்த வகையில் இல்லாமல், மந்த நிலை இருக்கும். இருப்பின் இறுதியில் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கக்கூடிய காலமாகவே இருக்கும்.

மீனம்;
சனிபகவான் மீன ராசிக்கு ஜென்ம சனியாக அமர உள்ளார். இதன் காரணமாக அடுத்த இரண்டரை ஆண்டுகள் எல்லா விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

நீங்கள் செய்யக்கூடிய தொழில், வேலையில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் காரணமாக நிதி இழப்புகள் ஏற்படும். திடீர் செலவுகள் உங்கள் பிரச்சினையையும், மனக்கவலையையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சூழலும், மனநிம்மதியற்ற சூழல் ஏற்படும். தொழில் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.

உங்களின் குடும்பத்திலும், பணியிடத்திலும் சாதகமற்ற சூழலும், உங்கள் வேலைகளையும் முடிப்பதில் அலைச்சலும் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here