மாத்தளை மாவட்டம் தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொலொன்கந்தபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது.
கொலொன்கந்தபிட்டிய, தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய தாய் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்டவரின் 30 வயதுடைய மகளும், 35 வயதுடைய மகனும், 34 வயதுடைய மருமகளும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட தாயின் சடலம் மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.