யாழ்ப்பாணம் – கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகாமையில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டில் ஒருவருடைய கைவிரல் வெட்டி விழுத்தப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு கைவிரல் பொருத்தப்பட்டது.
மேலும் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, யாழ்ப்பாணம் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் கெலும்பண்டார அவர்களின் தலமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் மூவர் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டனர்.
அவர்களை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் கெரோயின் போதைபொருள் கைப்பற்றபட்டது.
மேலும் மற்றுமொருவர் பெண் சட்டத்தரணி மூலம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இரண்டு வாள்களும், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன.
விசாரணையின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.