மட்டக்களப்பில் உணவு ஒவ்வாமை காரணமாக 52 மாணவர்கள் சுகவீனம்.. சிற்றூண்டிசாலை நடத்துனருக்கு சிறை.!

0
112

மட்டக்களப்பு – கரடியனாறு பாடசாலை சிற்றுண்டி சாலை நடத்துனருக்கு இரண்டு மாத கால கடூழிய சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதித்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் புதன்கிழமை (12) உத்தரவு பிறப்பித்தது.

செங்கலடி சுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகளினால் தாக்குதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையானது ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சிற்றுண்டி சாலை நடத்துனருக்கு இரண்டு மாத கால கடூழிய சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதித்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் சிற்றுண்டிச் சாலையில் செவ்வாய்க்கிழமை (11) விற்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 52 மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 27 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தது.

குறித்து மாணவர்கள் பாடசாலை இடைவேளை நேரத்தில் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டிச் சாலையில் நூடுல்ஸ் வாங்கி உண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக செங்கலடி சுகாதார வைத்திய அலுவலகம். அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று உணவு மாதிரிகளை பரிசோதனை மேற்கொண்ட தாக்குதல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணையானது ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.