இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சந்தேக நபர்களான இராணுவ வீரர்கள் கண்டி, கட்டுகஸ்தோட்டை மற்றும் அலவத்துகொடை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இராணுவ வீரர்கள் கண்டி பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில் பணிபுரிந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.