அநுராதபுரம் வைத்தியசாலை சம்பவம் – குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்..!

0
272

அநுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேக நபர் நேற்று இரவு அநுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேக நபரை நேற்று கல்னேவ ஹெலபதுகம பகுதியில் கல்னேவ காவல்துறையினர் கைது செய்தனர்.

கல்னேவ காவல்துறையினர் சந்தேக நபர் தொடர்பில் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தான் சிறைச்சாலையிலிருந்து பிணையில் வெளியில் வந்ததாகவும், பணம் இல்லாமையின் காரணமாக களவெடுக்கும் நோக்கத்தில் குறித்த வைத்தியர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றதாகச் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் விடுதியில் வைத்தியர் மாத்திரமே இருந்ததாகவும் அதை பயன்படுத்தி கொண்டதாகவும் சந்தேக நபர் வாக்குமூலமளித்துள்ளார்.

சந்தேக நபர் அந்தப் பிரதேசத்தில் பல வீடுகளை உடைத்து பொருட்கள் களவெடுத்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் நாட்டின் பிரபல குற்றவாளிகள் பட்டியலிலும் பெயருள்ள ஒருவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் – குற்றவாளியின் சகோதரி உட்பட இருவர் கைது.!