முதலாம் தவணையின் முதலாம் கட்ட பாடசாலை கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு.!

0
7

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தமது தேசிய அடையாள அட்டை தவல்கள் தொடர்பான உறுதிப்படுத்தல் கடிதங்களை எதிர்வரும் சனிக்கிழமை பெற்றுக்கொள்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை குறித்த கடிதங்களைக் காலை 8.30 முதல் மதியம் 12.30 வரை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்துவதற்கான கடிதங்களை ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் , மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கிளை அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த கடிதங்களை பெற்றக்கொள்ளுவதற்கான அவசியம் உள்ள மாணவர்கள் அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களுடன் நேரில் வருகைதர வேண்டும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here