55 வயது தாய் எ.ரி.த்.து.க்.கொ.லை செய்யப்பட்ட சம்பவம்.. மேலுமொருவர் கைது.!

0
37

தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாய் ஒருவரை எரித்து கொலை செய்ய உதவி செய்த மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் நேற்று (13) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடைய ஆணமடுவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் 35 வயது மகன், 30 வயது மகள் மற்றும் 34 வயதுடைய மருமகள் ஆகியோரை பொலிஸார் இதற்கு முன்னர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், தம்பகல்ல, கொலொன்கந்தபிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண்ணாவார்.

குறித்த பெண்ணை மண்வெட்டியால் தாக்கி எரித்து கொலை செய்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த மாதம் 19 ஆம் திகதி எரகம பொலிஸ் பிரிவின் அரபா நகர் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குற்றத்தை செய்த சந்தேக நபர், குற்றத்தைச் செய்த பின்னர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்று, வெலிகந்த பொலிஸ் பிரிவின் கட்டுவன்வில பகுதியில் மறைந்திருந்த போது, எரகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் நேற்று முன்தினம் (12) மாலை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here